வாடிக்கையாளர் தொடர் கல்வி
உங்கள் தினசரி வங்கி சேவைகள் அனைத்தையும் வழங்கும் CUB -ன் பொது சேமிப்பு கணக்கு.
- வாடிக்கையாளர், பிரபலமான இ-காமர்ஸ் இணையதளங்களில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்ய, பயன்பாட்டு கட்டணம் செலுத்த, நுகர்வோர் பொருட்களை வாங்குதல் போன்ற பரிவர்த்தனைகளை நெட்பேங்கிங் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி அவைகளை எளிதாக மற்றும் வசதியாக மேற்கொள்ள ஆன்லைன் பேங்கிங் உதவுகிறது. இருப்பினும் வாடிக்கையாளர் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகளை அவர் அறிந்திருக்க வேண்டும். மோசடியாளர்களிடம் இருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை பாதுகாத்து கொள்வதற்காக சில குறிப்புகள்.
இணையதள வங்கிப் பரிவர்த்தனைகள்
- Always use your home PC or laptop to login to CUB site (www.cityunionbank.bank.in) and never use browsing center to do Net Banking transactions
- இணையதள வங்கிக்குள் உள்நுழைய இணையதள முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்ட உங்கள் கணக்கை அணுகுங்கள் என்பதன் கீழுள்ள லிங்க் (பர்சனல் பேங்கிங் அல்லது கார்ப்பரேட் பேங்கிங்) -ஐ கிளிக் செய்யுங்கள்
- Please check whether the browser shows the below address https://www.onlinebanking.cub.bank.in/jsp/startnew.jsp
- அடிக்கடி கடவுச்சொல்லை மாற்றவும்
- உங்கள் கடவுச்சொல்லை எப்போதும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
- பொதுவான கடவுச்சொல் அல்லது எளிதாக கண்டுபிடிக்கக்கூடிய கடவுச்சொல்லை எப்போதும் பயன்படுத்தாதீர்கள்
- உங்கள் கடவுச்சொல்லை உங்கள் கைப்பேசி, அல்லது உங்கள் டெபிட் கார்டு பின்புறத்தில் எப்போதும் குறித்து வைக்காதீர்கள்
- உங்கள் இணையதள வங்கி சேவை பயனர் உள்நுழையும்போது படம் அடையாளம் கண்டறியும் முறையில் மேலும் பாதுகாக்கப்பட்டுள்ளது
- ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யும்போது, முந்தைய பக்கத்திற்கு செல்ல 'பின்செல்க' என்ற பட்டனை கிளிக் செய்யாதீர்கள்
- ஒவ்வொரு ஆன்லைன் நெட்பேங்கிங் பரிவர்த்தனையும் உங்கள் பரிவர்த்தனை கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் ஒருமுறை கடவுச்சொல்(OTP) வடிவத்தில் இரண்டாம் வழிமுறை அங்கீகாரம் உங்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
- உங்களுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல்(OTP) குறிப்பிட்ட பரிவர்த்தனைக்கு மட்டும் 15 நிமிடம் செல்லத்தக்கது.
- வாடிக்கையாளர் OTP-ஐ தங்கள் மின்னஞ்சல் கணக்கிற்கு பெறுவதற்கான தேர்வையும் கொண்டுள்ளனர். அத்தகைய நிலையில், OTP உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாத காலத்திற்கு செல்லுபடியாகும்
- ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், CUB உங்களின் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு ஒரு உறுதிசெய்யும் வகையிலான SMS-ஐ அனுப்பும்
- In case of any SMS received for a transactions NOT done by you, please call our Call Center (18001205000) or Branch or Computer System Dept (044-28297900 ) immediately
- CUB இரண்டு வழிமுறை அங்கீகாரங்களை இணையதள வங்கிக்கு உள்நுழையவும் (பயனர் கடவுச்சொல் மற்றும் படம் அடையாளம் காணுதல்) மற்றும் இரண்டு வழிமுறை அங்கீகாரங்களை பரிவர்த்தனைக்கும் (பரிவர்த்தனை கடவுச்சொல் மற்றும் OTP) வழங்குகிறது
- ஆன்லைன் பரிவர்த்தனைகளில் உங்கள் கைப்பேசி முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தயவுசெய்து உங்கள் கைப்பேசியை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள் மேலும் உங்கள் மேற்பார்வை இல்லாமல் அதை வேறு யாரிடமும் ஒப்படைக்காதீர்கள். ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தால், சரி செய்ய சேவை இன்ஜினியரிடம் கொடுக்கும் முன் சிம் கார்டை தயவுசெய்து கைப்பேசியிலிருந்து அகற்றி விடவும்.
- உங்கள் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரை வைரஸ் இன்றி சுத்தமாக வைத்திருக்க ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்துங்கள் மற்றும் உங்கள் ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர் சமீபத்தியதாகவும் மற்றும் இன்றைய தேதி வரை மேம்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதிலும் எப்போதும் கவனமாக இருங்கள்.
- உங்கள் கைப்பேசி எண்ணில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருந்தால், உங்கள் வங்கி கிளையைத் தொடர்பு கொண்டு தயவுசெய்து அதை புதுப்பிக்கவும்
டெபிட் கார்டு அடிப்படையிலான ஆன்லைன் பரிவர்த்தனைகள் கார்டு நாட் பிரசன்ட் (CNP) பரிவர்த்தனைகள் என்றும் அழைக்கப்படுகின்றன
- ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான உங்கள் டெபிட் கார்டு பயன்பாடு வெரிஃபை பை விசா (VBV) மூலம் பாதுகாக்கப்படுகிறது.
- VBV உடன் பதிவுசெய்த இணையதளம் மட்டுமே பணம் செலுத்துவதற்கான Visa கார்டுகளை ஏற்க முடியும்
- அனைத்து இந்திய இ-காமர்ஸ் இணையதளங்களும் VBV உடன் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள், ஆனால் இந்தியாவிற்கு வெளியே செயல்படும் இணையதளங்களில் VBV கட்டாயம் இல்லை. எனவே ebay.com அல்லது amazon.com போன்ற இணையதளங்களில் ஏதேனும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளை நீங்கள் முயற்சி செய்தால் உங்கள் பரிவர்த்தனை நிராகரிக்கப்படலாம்.
- இ-காமர்ஸ் பரிவர்த்தனை செய்வதற்கு முன்னால், தயவுசெய்து நீங்கள் உங்கள் கார்டை VBV உடன் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் மற்றும் VBV கடவுச்சொல் கொண்டிருப்பதையும் உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.
- For registering your Card with VBV you need to login vbv site or click on the link “verified by visa” given in our website
- உங்கள் கார்டை VBV உடன் பதிவு செய்ய நீங்கள் VBV இணையதளத்தில் உள்நுழைய வேண்டும் அல்லது எங்கள் இணையதளத்தில் உள்ள “விசா மூலம் சரிபார்க்கப்பட்டது” என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள் அல்லது பயன்படுத்துங்கள்https://secure5.es.arcot.com/vpas/CUB_vbv/
enroll/index.jsp?locale=en_US&bankid=4782 - VBV இணையதளத்தில் நுழைந்தவுடன், VBV கடவுச்சொல்லை உருவாக்க நீங்கள் உங்கள் கார்டு எண், பெயர், காலாவதியாகும் தேதி மற்றும் ATM PIN போன்றவற்றை வழங்க வேண்டும். இது ஒருமுறை செயல்முறை மற்றும் வாடிக்கையாளர் இந்த VBV கடவுச்சொல்லையே அவரின் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்த முடியும் என்பதை தயவுசெய்து நினைவில் வைத்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர் எந்த நேரத்திலும் VBV கடவுச்சொல்லை மாற்றி கொள்ள முடியும்.
- உங்கள் ATM PIN மற்றும் VBV கடவுச்சொல்லை எப்போதும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
- உங்கள் ATM PIN , VBV கடவுச்சொல் இவை இரண்டையும் எங்கும் சேமித்து வைக்காதீர்கள்
- ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், உங்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு SMS அறிவிப்பு அனுப்பப்படும் என்பதை தயவுசெய்து நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
- உங்கள் கைப்பேசி எண்ணில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருந்தால், உங்கள் வங்கி கிளையைத் தொடர்பு கொண்டு தயவுசெய்து அதை புதுப்பிக்கவும்.







